Post from: http://www.ottrumai.net/Arrivals/Dajjal.htm
நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்
'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.
'தஜ்ஜால்' எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும். இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.