Website: www.christianpaarvai.blogspot.com
இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா??? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும்.
இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது ‘சாமிரி’ என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய ‘ஆரோன்’ அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.